மரக்கடையில் தீ விபத்துரூ.1 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்

Update: 2023-09-22 19:00 GMT

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 54). இவர் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் மரக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மரக்கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து மரக்கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக குமார் மற்றும் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் பொதுமக்களின் உதவியுடன் தீயை அணைத்து அருகில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தீ பரவாமல் தடுத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் மரக்கடையில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள மரக்கட்டைகள் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து வேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்