லாரிகளுக்கு அபராதம்
அதிக பாரம் ஏற்றிய லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது;
இட்டமொழி:
தூத்துக்குடி மாவட்டம் காரசேரி பகுதியில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அதிகளவு எடை கொண்ட கற்கள் ஏற்றிய லாரிகள் நாங்குநேரி தாலுகா பகுதி வழியாக அதிகளவு சென்று வருகின்றன. இதனால் இப்பகுதியில் சாலைகள் சேதம் அடைந்து விடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வடக்கு விஜயநாராயணம் ஊர் வழியாக சென்ற 7 லாரிகளை அந்த பகுதி மக்கள் சிறை பிடித்தனர்.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாககுமாரி விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் அதிக பாரம் ஏற்றிய 7 லாரிகளுக்கும் அபராதம் விதித்தார்.