போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கியகிரேன் உள்பட 3 வாகனங்கள் பறிமுதல்போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை

Update: 2023-02-15 19:00 GMT

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்கிற்கு மின்வாரிய ஊழியர்கள் ஹெல்மெட் அணியாமல் பணிக்கு வருவதாக புகார் சென்றது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் நேற்று பரமத்தி சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய மின்வாரிய ஊழியர்கள் உள்பட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பதிவுச்சான்று புதுப்பிக்காமலும், வரி செலுத்தாமலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கிய கார், கிரேன், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனையின் போது ரூ.45 ஆயிரம் வரி வசூல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்