சாலையில் திரிந்த 5 மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் திரிந்த 5 மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-08-31 18:44 GMT

சிவகாசி, 

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக மாடுகள் திரிவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் பலியும் ஏற்படுகிறது. இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் சாலையில் திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்க முடிவு செய்தது. இந்த நிலையில் மாநகராட்சி நகர அமைப்பு மேற்பார்வையாளர் முத்துராஜ் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் நேற்று சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பல்வேறு இடங்களில் 5 மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் திரிந்தன. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் அடைத்து வைத்து பராமரித்தனர். பின்னர் 5 மாடுகளின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் அம்பேத்கர் மணி மண்டபம் அருகில் அரசுக்கு சொந்தமான இடத்தில் டீக்கடை வைத்து நடத்தப்பட்டு வந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் நேற்று காலை மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பில் இருந்த அந்த டீக்கடையை அகற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்