அதிகபாரம் ஏற்றி வந்த லாரிக்கு அபராதம்
அதிகபாரம் ஏற்றி வந்த லாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;
ஆந்திர மாநிலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு லாரியில் பிளாஸ்டிக் பொருட்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிக்கொண்டு லாரி சென்றது.
காட்பாடியில் லாரி வந்து கொண்டிருந்தபோது லாரி கவிழும் வகையில் ஆபத்தான நிலையில் இருந்தது. இதைப்பார்த்த காட்பாடி போக்குவரத்து போலீசார் லாரியை மடக்கினர். மேலும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். அப்போது போக்குவரத்து விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.