முககவசம் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம்

முக கவசம் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-07-01 16:21 GMT

சிவகங்கை 

முக கவசம் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொற்று அதிகரிப்பு

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:- கொரோனா தொற்று பரவல் இந்தியாவில் பல மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில் தொற்றுப்பரவல் அதிகரித்து உள்ளது.

சிவகங்கை மாவட் டத்தில் இதுவரை காரைக்குடி, தேவகோட்டை, நகர்புறப் பகுதிகள் சாக்கோட்டை ஒன்றியம், சிவகங்கை நகராட்சி பகுதிகளில் நோய்த்தொற்று பரவி வருகிறது. எனவே ேநாய்தொற்று பரவலை தடுக்க தற்போது வழிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் அதிகமாக மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வாய் மற்றும் மூக்கை மூடியவாறு முகக்கவசம் அணிய வேண்டும். உரியநேரத்தில் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். திரையரங்குகள், சந்தைப்பகுதிகள், மருத்துவமனைகள், பூங்காக்கள், பேரங்காடிகள் ஆகிய பகுதிகளில் கடை உரிமையாளர்கள், நிறுவன உரிமை யாளர்கள் வருகை புரியும் அனைவருக்கும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விளக்கி கூறி முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.

வெப்ப பரிசோதனை

அலுவலகங்களில் பணியாற்றும் அனைத்து பணியாளர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து பணிபுரிய வேண்டும். தெர்மல் ஸ்கேனர்மூலம் அலுவலகங்களுக்குள் நுழையும் அனை வருக்கும் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும். காய்ச்சல் உள்ளவர்களுக்கு உரிய பரிசோதனை செய்துதொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். கை கழுவும் வசதிகள் அனைத்து அலுவலகங்களிலும் ஏற்படுத்த வேண்டும். பொது இடங்களில் முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்