விஜயகரிசல்குளம் அகழாய்வில் காதணி கண்டெடுப்பு
விஜயகரிசல்குளம் அகழாய்வில் காதணி கண்டெடுக்கப்பட்டது.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 2-ம் கட்ட அகழாய்வில் பெண்கள் பயன்படுத்திய அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண்ணால் செய்யப்பட்ட காதணி மற்றும் குடிநீர் பானையை மூடுவதற்காக பயன்படுத்தப்பட்ட மண் முடி கிடைத்தது. இதுவரை 3,180 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 15 அகழாய்வுகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் 5 குழிகள் முழுமையாக 15 அடி ஆழம் தோண்டப்பட்டுள்ளது அதில் கிடைத்த பொருட்களின் நீளம் மற்றும் அகலம் பற்றியும், குழியின் ஆழம் உயரம், குறித்து ஆவணப்படுத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது. முதலாம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள் கண்காட்சியினை தொடர்ந்து பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர். இதுவரை 6,500 பேர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளதாக தொல்லியல் இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.