மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்புக்காக ரூ.2¼ லட்சம் நிதியுதவி

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்புக்காக ரூ.2¼ லட்சம் நிதியுதவியை கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. வழங்கினார்.

Update: 2022-12-04 18:51 GMT

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகள் தின விழா நடந்தது. அதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், 7 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில் உள்ள 437 மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பு செலவுக்காக ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்பட்டது. அணைக்கும் கரங்கள் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளிக்கு ரூ.50 ஆயிரமும், ஜே.ஜே.கே. கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன்களுக்கான சிறப்பு பள்ளி, கலர்புல் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி, நியூ லைப் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளி, கம்பத்துக்காரர் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி, ஏழின் மற்றும் சிவபாக்கியம் 14 வயதிற்கு மேற்பட்டோருக்கான மனவளர்ச்சி கொண்டோருக்கான இல்லங்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் அந்தந்த பள்ளி நிர்வாகத்தினரிடம் வழங்கப்பட்டது. அதை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.ஆர்‌.என்.ராஜேஸ்குமார் எம்.பி., பெ.ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கினர். மேலும் ஜே.கே.கே. சிறப்பு பள்ளியின் சைகை மொழிபெயர்ப்பாளர்கள் ராஜேஷ், பாக்கியலட்சுமி ஆகியோருக்கு ஊக்கத்தொகையாக ரூ.25 ஆயிரம் மற்றும் புதுப்பட்டி மாற்றுத்திறனாளி தெருவை சேர்ந்த உதயகுமாரின் மகன் நவீன்குமாருக்கு மருத்துவப் படிப்பிற்காக கல்வி உதவித்தொகையாக ரூ.15 ஆயிரம் என மொத்தமாக ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கியது குறிப்பிடத்தக்கது. அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்