கூட்டுறவு வங்கியில் ரூ.1 கோடியே 90 லட்சம் நிதி இழப்பு; 5 பேர் கைது

கூட்டுறவு வங்கியில் ரூ.1 கோடியே 90 லட்சம் நிதி இழப்பு தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-29 21:45 GMT

லால்குடி வட்டம், தச்சங்குறிச்சியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், 2019-20-ம் நிதியாண்டில் பல்வேறு வகைகளில் ரூ.1 கோடியே 90 லட்சம் அளவுக்கு நிதி இழப்பு ஏற்பட்டது. இதனை ஆண்டு தணிக்கையில் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவில் அப்போதைய மாவட்ட பதிவாளர் திவ்யா புகார் அளித்தார். அதன்பேரில், அப்போதைய சங்கத்தின் செயலாளர் ஆர்.ராஜேஸ் கண்ணன், தலைவர் தேவராஜன், உறுப்பினர்கள் கஜேந்திரன், கிருஷ்ணன் உள்ளிட்ட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய கஜேந்திரன், பாலகிருஷ்ணன், நடராஜன், ராஜேஸ்வரி, அமுதா ஆகிய 5 பேரை பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லி கிரேஸ் மற்றும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்