நிதி நிறுவன மேலாளர் கைது

ரூ.26 லட்சம் மோசடி செய்த நிதி நிறுவன மேலாளரை போலீசார் கைது செய்தார்.

Update: 2022-12-21 20:39 GMT

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 71). இவர் தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்ட நிதி நிறுவனத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளையில் ரூ.26 லட்சம் செலுத்தியுள்ளார். ஆனால் பணம் திரும்ப கிடைக்காத நிலையில் அவர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை மேலாளர் முனியசாமி (61) என்பவர் சரஸ்வதி செலுத்திய பணத்தை நிதி நிறுவனத்தில் செலுத்தாமல் மோசடி செய்தது தெரியவந்தது. அதன் பேரில் போலீசார், முனியசாமியை கைது செய்து காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்