அறந்தாங்கியில் நிதி நிறுவனத்தில் மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம்

அறந்தாங்கியில் நிதி நிறுவனத்தில் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-03-12 19:10 GMT

அறந்தாங்கியில் கார்த்திக் என்பவர் சந்தைகள் ஏலம் மற்றும் நிதி நிறுவனம் நடத்தி, அதில் பணம் முதலீடு செய்தால் அப்பணத்திற்கு வட்டியாகவும், சந்தை லாபத்தில் பங்கீடு கொடுப்பதாகவும், ஆசை வார்த்தை கூறியதால் பலர் அவரிடம் முதலீடு செய்ததில் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிதிநிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்