அருளம்பாடியில் நிதிசார் கல்வி முகாம்

அருளம்பாடியில் நிதிசார் கல்வி முகாம் நடைபெற்றது.

Update: 2022-12-08 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைப்பட்டு தமிழ்நாடு கிராம வங்கி சார்பில் அருளம்பாடியில் நிதி சார்கல்வி முகாம் நடைபெற்றது. இதற்கு வங்கி துணை மேலாளர் நிஷாந்த் தலைமை தாங்கினார்.காசாளர் குழந்தைவேல் முன்னிலை வகித்தார். உதவியாளர் திருப்பதி ராஜ் வரவேற்றார். முகாமில் தமிழ்நாடு கிராம வங்கியின் சிறப்பு அம்சங்கள், பாதுகாப்பு பெட்டகங்கள், வங்கியில் கணக்கு தொடங்கும் எளிய முறை, அதனை எவ்வாறு அணுக வேண்டும், பண பரிவர்த்தனையின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் வங்கி சார்பில் காப்பீட்டு தொகை, வைப்புத் தொகை உள்ளிட்டவைகள் மூலம் வழங்கப்படும் சலுகைகள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. இதில் வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்