மின்சாரம் தாக்கி இறந்த குடும்பத்திற்கு நிதி உதவி

மின்சாரம் தாக்கி இறந்த குடும்பத்திற்கு நிதி உதவி அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் வழங்கப்பட்டது.

Update: 2023-05-21 18:25 GMT

முதுகுளத்தூர், 

முதுகுளத்தூர் காந்தி நகரை சேர்ந்த பாலமுருகன்(வயது 27). இவர் சம்பவத்தன்று ஆற்றுப்பாலம் அருகே டிராக்டரை பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிராக்டர் மீது மேலே சென்ற உயர் மின்னழுத்த கம்பி உரசியதில் பாலமுருகன் மீது மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார். இதைத்தொடர்ந்து அரசு நிவாரண வழங்க கோரி பாலமுருகனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் தொழில் வாரிய துறை அமைச்சரும் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜகண்ணப்பனின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதையெடுத்து மின்சாரம் தாக்கி உயிர் இழந்த பாலமுருகன் குடும்பத்திற்கு தனது சொந்த நிதி உதவி வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுத்தார். அதன்பேரில் அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் தி.மு.க. முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பூபதி மணி, மத்திய ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பாலமுருகன் மனைவி காவியாவிடம் ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் முதுகுளத்தூர் சின்னக்கண்ணு, கமுதி மணிகண்டன், முதுகுளத்தூர் தாசில்தார் சிவக்குமார், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மாலதி, பேரூராட்சி கவுன்சிலர் சேகர், முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலக உதவியாளர்கள் சத்யேந்திரன், டோனி, சார்லஸ், ரஞ்சித், மணிகண்டன் மற்றும் தேவேந்திர குல வேளாளர் சங்க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்