ரத்த பரிசோதனை கருவி வாங்க நிதி உதவி

கலவை அரசு மருத்துவமனைக்கு ரத்த பரிசோதனை கருவி வாங்க நிதி உதவி வழங்கப்பட்டது.;

Update: 2023-09-09 11:58 GMT

கலவை அரசு மருத்துவமனைக்கு ரத்த பரிசோதனை கருவி (செமி ஆட்டோ அனைசர்) வாங்குவதற்கு ஓய்வு பெற்ற டாக்டரும், இந்தியாவின் சிறந்த குடிமகன் விருது பெற்றவருமான கலவையை சேர்ந்த டாக்டர் செங்கோட்டையன் மாவட்ட கலெக்டர் வளர்மதியிடம் நிதி உதவி வழங்கினார். மாவட்ட இணை இயக்குனர் விஜய்முரளி, டாக்டர் விக்னேஷ், சமூக ஆர்வலர் புருஷோத்தமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த கருவி மூலம் இலவசமாக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மஞ்சள்காமாலை போன்றவைக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படும். 

Tags:    

மேலும் செய்திகள்