மீன் வளர்ச்சி கழகம் சார்பில் ரூ.24¼ லட்சம் நிதி உதவி

நாகை நகராட்சி மேம்பாட்டுக்காக மீன் வளர்ச்சி கழகம் சார்பில் ரூ.24¼ லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

Update: 2023-04-11 18:45 GMT

நாகை நகராட்சி நிதிநெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் வரி வசூல் தீவிர படுத்தப்பட்டு வருகிறது. நிதி நெருக்கடியால் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகள் செய்வதில் தொய்வு ஏற்படுகிறது. இதையடுத்து நகராட்சி தலைவர் மாரிமுத்து, தமிழ்நாடு மீன்வளர்ச்சிக்கழகத் தலைவரிடம், நிதி உதவி செய்ய கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து நகராட்சிக்கு பயணிகள் நிழகலம், உயர்மின் கோபுர விளக்கு, இலகு ரக வாகனம் உள்ளிட்ட நகராட்சியின் மேம்பாட்டுபணிக்கு வழங்க முதல்வரின் உத்தரவின்பேரில், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக்கழகத்தலைவர் ரூ.24 லட்சத்து 25 ஆயிரம் நிதியை ஒதுக்கீடு செய்தார். இந்தநிதி வழக்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன் கலந்துகொண்டு, நகராட்சிக்கு ஒதுக்கீடு செய்த நிதிக்கான காசோலையினை, தலைவர் மாரிமுத்து, கமிஷனர் ஸ்ரீதேவி ஆகியோரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர்கள் அண்ணாதுரை, திலகர், சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர

Tags:    

மேலும் செய்திகள்