கோவில் திருப்பணிகளுக்கு நிதி உதவி; ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்

சங்கரன்கோவில் பகுதியில் உள்ள கோவில்களில் திருப்பணிகளுக்கு ராஜா எம்.எல்.ஏ. நிதி உதவி வழங்கினார்.

Update: 2023-02-20 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் பகுதியில் உள்ள கோவில்களுக்கு அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ராஜா எம்.எல்.ஏ. நிதி உதவி வழங்கினார். சங்கரன்கோவில் அம்பேத்கர் 1-வது தெரு மற்றும் கக்கன் நகர் பகுதியில் உள்ள வடகாசி அம்மன், பார்வதி அம்மன் கோவிலுக்கும், காமராஜர் 2-வது தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோவிலுக்கும் திருப்பணிகளுக்காக தலா ரூ.1 லட்சம் வழங்கினார்.

இதில் வார்டு செயலாளர்கள் சரவணன், பழனிச்சாமி, நாட்டாமை ராதாகிருஷ்ணன், தொ.மு.ச. ஜெயராமன், நகர பொருளாளர் லாசர் என்ற சதாசிவம், கவுன்சிலர் ராமு ராமர், செல்வகுமார், சங்கர், உள்ளிட்டோர் நிதியை பெற்று கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்