நவீன சலவையகங்கள் அமைக்க நிதி உதவி

நவீன சலவையகங்கள் அமைக்க நிதி உதவி அளிக்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-25 17:35 GMT

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும் 10 நபர்களைக் கொண்ட குழுவாக அமைத்து நவீன சலவையகங்கள் அமைக்க தலா ரூ.3 லட்சம் வீதம் தமிழகம் முழுவதும் 25 அலகுகள் ஏற்படுத்த அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

எனவே இத்திட்டத்தில் பங்கு கொள்ள ஆர்வமாக உள்ள இவ்வினத்தை சேர்ந்த மக்கள் தகுதியான குழுக்களை அமைத்து குழுவின் மூலம் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்