மருத்துவக்கல்லூரி மாணவருக்கு நிதியுதவி

மருத்துவக்கல்லூரி மாணவருக்கு நிதியுதவியை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்

Update: 2023-08-29 21:24 GMT

ராஜபாளையம்,

சேத்தூர் பேரூராட்சியில் அமைந்துள்ள சேத்தூர் சேவகப்பாண்டியன் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மகாலிங்கம் என்ற மாணவன் நீட் தேர்வில் வெற்றி பெற்று மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் பயில இடம் கிடைத்துள்ளது. எனவே மருத்துவக்கல்லூரியில் படிப்பதற்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. விடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து மாணவன் மகாலிங்கத்திற்கு தனது மாத ஊதியம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை எம்.எல்.ஏ. வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் முருகேஸ்வரி, பேரூராட்சித்தலைவர் பாலசுப்பிரமணியன், செயல் அலுவலர் சந்திரகலா, துணைத்தலைவர் காளீஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்