முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு.!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று சந்தித்து பேசினார்.
சென்னை,
சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று சந்தித்து பேசினார். இவருடன் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் முருகானந்தம் உடனிருந்தார்.
2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் 20-ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் முதல்-அமைச்சருடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.