மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல்

மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

Update: 2023-05-04 18:33 GMT

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வாக்காளர் பட்டியலை கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பஞ்சாயத்து வளர்ச்சி) சிவராமகிருஷ்ணராஜ் பெற்றுக் கொண்டார். தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் (மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தல்) விதிகள் 1999-ன் படி கரூர் மாவட்ட திட்டமிடும் குழுவிற்கு மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களில் இருந்து 8 பேரையும், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி உறுப்பினர்களில் இருந்து 4 பேரையும் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கு கரூர் மாவட்டத்தில் இன்றைய நிலையில் உள்ள மாவட்ட ஊராட்சி, பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் உள்ள மொத்தம் 258 உறுப்பினர்களை கொண்ட இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்