அசெம்பிளி தியேட்டரில் திரைப்பட விழா

ஊட்டி 200-வது ஆண்டு விழாவையொட்டி அசெம்பிளி தியேட்டரில் திரைப்பட விழா நடந்தது.

Update: 2023-05-17 23:00 GMT

ஊட்டி

ஊட்டி உருவாகி 200-வது ஆண்டு தொடக்க விழாவை கடந்த ஆண்டு மே மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையொட்டி சுற்றுலாவை மேம்படுத்தவும், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியது. இதைத்தொடர்ந்து 200-வது ஆண்டு விழாவையொட்டி புகைப்பட கண்காட்சி மற்றும் திரைப்பட விழா நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, ஊட்டி அசெம்பிளி திரையரங்கில் திரைப்பட விழா நேற்று தொடங்கியது.

இதில் நீலகிரி மாவட்டத்தில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டது. ஊட்டி வரை உறவு, மூடுபனி, முள்ளும் மலரும் ஆகிய திரைப்படங்கள் திரையிடப்பட்டன. விழாவில் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு திரைப்படங்களை பார்வையிட்டனர். வருகிற 23-ந் தேதி வரை திரைப்பட விழா நடக்கிறது. இதில் மூன்றாம் பிறை, மின்சார கனவு, நடிகன், யார் நீ, காதலிக்க நேரமில்லை, உள்ளத்தை அள்ளித்தா, தெய்வத்திருமகள், நல்ல நேரம் உள்ளிட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்