திரைப்பட இயக்குனர் கொலை வழக்கில் தம்பதிக்கு வலைவீச்சு
திரைப்பட இயக்குனர் கொலை வழக்கில் தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை அண்ணா தெருவை சேர்ந்த திரைப்பட இயக்குனர் அப்துல் ரகுமான் கொலை வழக்கில், திருநகரை சேர்ந்த ஒரு தம்பதி தலைமறைவாகி முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அவர்களின் மனுக்கள் தள்ளுபடியானது. இதையடுத்து அந்த தம்பதியை பெரம்பலூர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.