விலங்குகளுக்காக தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி

பாணாவரம் காப்புக்காட்டில் விலங்குகளுக்காக தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்றது.

Update: 2023-04-30 18:38 GMT

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த பாணாவரத்தில் காப்புக்காடு அமைந்துள்ளது. இந்த காப்புக் காட்டில் மான், முயல், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, நரி உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகின்றன. ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாத கோடை காலத்தில் காட்டு பகுதியில் தண்ணீர் இல்லாததால் விலங்குகள் காட்டைவிட்டு வெளியே வரவேண்டிய சூழல் ஏற்படுகிறது.

அப்படி வெளியே வரும் விலங்குகள் ெரயிலில் அடிபட்டும், நாய்கள் கடித்தும், கிணற்றில் தவறி விழுந்தும் இறக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

விலங்குகள் காட்டில் இருந்து வெளியே வருவதை தடுக்க ஆண்டுதோறும் பாதுகாப்பு அதிகாரிகளின் அனுமதியோடு காப்புக்காடு பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணியை சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர். தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் நேற்று தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி நடந்தது. மேலும் காட்டை சுற்றி கம்பி வேலி அமைக்க சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்