உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான களப்பயண ஆலோசனை கூட்டம்

பிளஸ்-2 மாணவர்கள் நாளை உயர்கல்வி திட்ட களப்பயணம் மேற்கொள்கின்றனர். அது குறித்து கலெக்டர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

Update: 2023-02-22 15:05 GMT

பிளஸ்-2 மாணவர்கள் நாளை உயர்கல்வி திட்ட களப்பயணம் மேற்கொள்கின்றனர். அது குறித்து கலெக்டர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 வகுப்பு பயிலும் மாணவ - மாணவிகளை உயர்கல்வி வழிகாட்டலுக்கான கல்லூரி களப்பயணம் முன்னேற்பாடு குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசுகையில்,''பிளஸ்-2 பயிலும் 508 மாணவ- மாணவிகளை நாளை (வெள்ளிக்கிழமை) கல்லூரிகளுக்கு அழைத்து செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினத்தில் மாணவர்களை கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்ல பஸ் மற்றும் உணவு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பிளஸ்-2 பயிலும் மாணவ - மாணவிகளுக்கு உயர்கல்வி பயில ஆர்வமூட்டப்பட்டு உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது'' என்றார்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, போக்குவரத்து துறை அலுவலர், அரசு கலைக் கல்லூரி முதல்வர்கள், அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வர், மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை). மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி), மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்), மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மற்றும் கல்லூரி நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்