காய்ச்சல் பரிசோதனை முகாம்களை தினமும் நடத்த வேண்டும்

காய்ச்சல் பரிசோதனை முகாம்களை தினமும் நடத்த வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.

Update: 2022-09-22 16:18 GMT

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மகப்பேறு இறப்பு தணிக்கை மற்றும் துறை செயல்பாடுகள் குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.

இதில் மகப்பேறு இறப்புகள் மற்றம் சிசு இறப்புகள் காரணங்களை ஆய்வு செய்து, மகப்பேறு இறப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர், இணை இயக்குனர் (நலப்பணிகள்) மற்றும் துணை இயக்குனர் (சுகாதாரப்பணி) அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களை அதிகப்படுத்துமாறு, கர்ப்பிணிகளை தொடர் கண்காணிப்பின் போது உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.

மேலும் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை தினமும் பள்ளிகள் மற்றும் கிராமங்களில் நடத்தப்பட வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.

மேலும் தேசிய அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்புத்திட்டம் குறித்தும், தொழில்நுட்பக்குழு பற்றியும், மக்களைத்தேடி மருத்துவம் திட்ட செயல்பாடுகள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருமால்பாபு, இணை இயக்குனர் (நலப்பணிகள்) ஏழுமலை, சுகாதாரப்பணிகள் துணைஇயக்குனர்கள் செல்வகுமார், சதீஷ், துணை இயக்குனர்கள் அன்பரசி (குடும்பநலம்), அசோக் (காசநோய்), கார்த்திக் (தொழுநோய்), மருத்துவர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்