வெள்ளக்குட்டை ஊராட்சியில் காய்ச்சல் மருத்துவ முகாம்

வெள்ளக்குட்டை ஊராட்சியில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2022-09-13 13:37 GMT

வாணியம்பாடி

வெள்ளக்குட்டை ஊராட்சியில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஆலங்காயம் ஒன்றியம், வெள்ளக்குட்டை ஊராட்சியில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வந்தது. இதனை தொடர்ந்து, பொது மக்களின் கோரிக்கையை ஏற்று திருப்பத்தூர் மாவட்ட துணை இயக்குனர் சுகாதார பணிகள் டாக்டர்.செந்தில் ஆணைக்கினங்க, ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ச.பசுபதி தலைமையில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தமிழக அரசின் சார்பில் சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் நர்சுகள் வீடு வீடாக சென்று காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களை முகாமிற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

முகாமில் ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் சங்கீதாபாரி, ஊராட்சி மன்ற தலைவர்.கவிதா திருமலை, துணை தலைவர் கோபி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், நிம்மியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர்.செ.மதன்ராஜ், நடமாடும் மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர்.பிரசாந்த் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்