4 கிராமங்களில் காய்ச்சல் ஒழிப்பு முகாம்
4 கிராமங்களில் காய்ச்சல் ஒழிப்பு முகாம் நடந்தது.
வடமதுரை பகுதிகளில் உள்ள கிராமங்களில் நடமாடும் மருத்துவக்குழு மூலம் பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா? என்று கண்டறிய வேண்டும். காய்ச்சல் ஒழிப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்று பொது சுகாதாரத்துறையினருக்கு அரசு உத்தரவிட்டது. அதன்படி வடமதுரையை அடுத்த கொம்பேறிபட்டி, பாகாநத்தம், ஜங்கால்பட்டி, ஒத்தப்பட்டி ஆகிய 4 கிராமங்களில் காய்ச்சல் ஒழிப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் மக்களை தேடி மருத்துவக்குழு டாக்டர் காவியா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமாரசாமி, கொம்பேறிபட்டி ஊராட்சி தலைவர் ராஜரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு உரிய சிகிச்சை