செகந்திராபாத்- ராமேசுவரம் இடையே பண்டிகை சிறப்பு ரயில்
பட்டுக்கோட்டை வழியாக செகந்திராபாத்- ராமேசுவரத்துக்கு பண்டிகை சிறப்பு ரயில் அடுத்த மாதம் 24-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.
பேராவூரணி,
பட்டுக்கோட்டை வழியாக செகந்திராபாத்- ராமேசுவரத்துக்கு பண்டிகை சிறப்பு ரயில் அடுத்த மாதம் 24-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.
பண்டிகை கால சிறப்பு ரெயில்
செகந்திராபாத் - ராமேஸ்வரம் (வழி சென்னைஎழும்பூர்- மயிலாடுதுறை- திருவாரூர்- பட்டுக்கோட்டை - காரைக்குடி) பண்டிகை கால சிறப்பு ரயில் அடுத்த மாதம் (ஆகஸ்டு்) 24-ந் தேதி முதல் டிசம்பர் 28-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளது.செகந்திராபாத் -ராமேஸ்வரம் சிறப்பு விரைவு ரயில் (வண்டி எண் 07685) புதன்கிழமை தோறும் இரவு 7.05 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்னை எழும்பூரை அடைகிறது. பின்னர் அங்கிருந்து திருவாரூர், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, வழியாக சென்று இரவு 11.40 மணிக்கு ராமேசுவரத்தை சென்றடையும்.
பேராவூரணியில் நிறுத்த கோரிக்கை
இதைப்போல ராமேஸ்வரம் - செகந்திராபாத் விரைவு ெரயில்(வண்டி எண்07686) ஆகஸ்டு் 26 -ந் தேதி முதல் டிசம்பர் 30 -ந்தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் காலை 8.50 மணிக்கு ராமேசுவரத்தில் புறப்பட்டு காரைக்குடி , அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருவாரூர், சென்னை எழும்பூர் வழியாக மறுநாள் சனிக்கிழமை மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத்தை அடைகிறது. 21 பெட்டிகளை கொண்ட இந்த வாராந்திர சிறப்பு ெரயில் ஆகஸ்டு முதல் டிசம்பர் மாதம் வரை இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயிலை பயணிகள் நலன் கருதி, பேராவூரணி ரயில் நிலையத்தில், ஒரு நிமிடம் நிறுத்தி இயக்க வேண்டும் என, பேராவூரணி வட்ட ரயில் பயனாளிகள் சங்கம் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.