புனித செபஸ்தியார் ஆலய திருவிழா

குன்னூரில் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-01-21 18:45 GMT

குன்னூர், 

குன்னூரில் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றம்

குன்னூர் மவுண்ட் ரோட்டில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 35-வது ஆண்டு திருவிழா நேற்று மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்கு தந்தை மார்டின் புதுசேரி கொடியேற்றி வைத்தார். வருகிற 29-ந் தேதி புனித செபஸ்தியார் திருவிழா நடக்கிறது. இதையொட்டி நேற்று முதல் தினமும் மாலை 5 மணிக்கு திருப்பலி, நவநாள் பிரார்த்தனை நிறைவேற்றப்படுகிறது. வருகிற 28-ந் தேதி செபஸ்தியாரின் அம்புகள் குன்னூர், சேலாஸ், பேரக்ஸ் பகுதிகளில் உள்ள வீதிகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது. பின்னர் மாலை 6 மணிக்கு பஸ் நிலையத்தில் இருந்து ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஆராதனை நடத்தப்படுகிறது.

தேர் பவனி

29-ந் தேதி திருநாள் திருப்பலி காலை 7 மற்றும் 10 மணிக்கு மலையாளத்திலும், மாலை 4.30 மணிக்கு தமிழிலும் நிறைவேற்றப்படுகிறது. அன்று மாலையில் புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி நடைபெறுகிறது. ஆலயத்தில் இருந்து தேர் பவனி தொடங்கி பஸ் நிலையம் வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை மார்டின் புதுசேரி, அந்தோனி, டோமி தாமஸ், விழா தலைவர்கள் ஜோஸ் குட்டன், ஷாஜூ ஆகியோர் செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்