விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் விழா
ஜோலார்பேட்டையில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி கலந்துகொண்டு, விவசாயகளுக்கு இடுபொருட்களை வழங்கினார்.
விழாவில் ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன், நகரமன்ற தலைவர் காவியாவிக்டர் மற்றும் வேளாண்மை துறை சார்ந்த அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.