புனித பெரியநாயகி அன்னை ஆலய திருவிழா
பெருமாண்டி புனித பெரியநாயகி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கும்பகோணம் :
கும்பகோணம் பழைய பாலக்கரை பெருமாண்டியில் உள்ள புனித பெரியநாயகி அன்னை தேவாலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு ஆத்துக்குடி பங்குத்தந்தை மரியதாஸ் ஜெபமாலை மற்றும் திருப்பலி நிறைவேற்றினார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து வருகிற 15-ந் தேதி(சனிக்கிழமை) ஜெப மாலை, திருப்பலியுடன் அன்னையின் அலங்கார ஆடம்பர தேர்பவனியும், 16-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நிறைவு பெற்று ஆண்டு திருவிழா கொடி இறக்கமும் நடக்கிறது.