பக்தர்குளம் மாரியம்மன் கோவிலில் திருவிழா
அகஸ்தியன்பள்ளி பக்தர்குளம் மாரியம்மன் கோவிலில் திருவிழா
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளி கிராமத்தில் உள்ள பக்தா் குளம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 12 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில் பக்தா்கள் விரதம் இருந்து வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் இருந்து பால், பன்னீர், நல்லெண்ணெய், சந்தன காவடி எடுத்து 5 கி.மீ. தூரம் நடந்து கோவிலுக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதை முன்னிட்டு வேதாரண்யேஸ்வரர் கோவிலில் இருந்து காமதேனு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பயத்தவரன்காடு கிராம மக்கள் செய்து இருந்தனர்.