மூக்காரெட்டிப்பட்டியில்மாரியம்மன் கோவில் திருவிழாபக்தர்கள் அம்மன் வேடமணிந்து நேர்த்திக்கடன்
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மூக்காரெட்டிப்பட்டியில் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 21-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து கூழ் ஊற்றுதல், கொடியேற்றம், பந்தகால் நடுதல், மாதேஸ்வரன், அய்யனாரப்பன், மோட்டூர் மாரியம்மன் ஆகிய சாமிகளுக்கு மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் அம்மன் வேடமணிந்து வீதி உலா வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.