சித்தன்ன சாமி கோவில் சித்திரை திருவிழா

சித்தன்ன சாமி கோவில் சித்திரை திருவிழா நடைபெற்றது

Update: 2023-05-10 18:45 GMT

எஸ்.புதூர்

எஸ்.புதூர் அருகே உள்ள கரிசல்பட்டி சித்தன்ன சாமி கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக அனைத்து சமுதாய மக்களும் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் அக்ரகாரம் பகுதியில் உள்ள கோவிலில் இருந்து பூ, பழம், வேட்டி, துண்டு தட்டுகளை சுமந்து கொண்டு மேல்கரை பீர் சுல்தான் ஒலியுல்லா தர்கா சென்று அங்கு பாத்தியா ஓதி வழிபட்டனர். அதனை தொடர்ந்து மச்சு வீடு தர்கா வழியாக சித்தன்ன சாமி கோவிலை வந்தடைந்தனர். அங்கு சித்தன்ன சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. உள்ளூர் கோவில் மாடுகளுக்கு மாலை, வேட்டி, துண்டு அணித்துவித்து அவிழ்த்துவிட்டனர். பின்னர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் அனைத்து சமுதாய மக்களும், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்