கொடைக்கானல் மேல்மலை பகுதியில் சித்திரபுத்திரன் திருவிழா

கொடைக்கானல் மேல்மலை பகுதியில் சித்திரபுத்திரன் திருவிழாவையொட்டி பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

Update: 2023-04-30 21:00 GMT

கொடைக்கானல் மேல்மலை பகுதிகளான மன்னவனூர், கவுஞ்சி, பூண்டி, போளூர் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி ஒவ்வொரு ஆண்டும் சித்திரபுத்திரன் திருவிழா பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று நடைபெற்றது. போளூர் கிராமத்தில் சித்திரபுத்திரன் திருவிழாவில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு, பாரம்பரிய முறைபடி சிவப்பு அரிசியை கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

அதன்பிறகு திருவிழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் 18 வகையான காய்கறிகளை கொண்டு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவின்போது பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் மேல்மலையில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் சித்திரபுத்திரன் திருவிழா நடைபெற்றது. அப்போது பொங்கல் வைத்து சித்திரபுத்திரனுக்கு படைத்தனர். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்