எருமப்பட்டி மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா

Update: 2023-03-27 18:45 GMT

எருமப்பட்டி:

எருமப்பட்டியில் அக்னி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலை மாவிளக்கு பூஜையும், மாலை தீமிதி விழாவும் நடந்தது. இதில் ஆண், பெண் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. எருமப்பட்டி, சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்