தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவில் திருவிழா-கணபதி பூஜையுடன் தொடங்கியது

Update: 2022-09-20 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று கணபதி பூஜையுடன் தொடங்கியது. பின்னர் யாகசாலை பூஜைகளும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகளும் நடைபெற்றன. விழாவையொட்டி பக்தர்களுக்கு காப்பு கட்டுதலும், அக்கரைப்பட்டி முனியப்பன் கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. தொடர்ந்து இடும்பன் ஊர்வலமும், சக்தி கரகம் அழைத்தலும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

மேலும் செய்திகள்