கொல்லிமலையில் பழங்குடியினர் தின விழா கொண்டாட்டம்

கொல்லிமலையில் பழங்குடியினர் தின விழா கொண்டாடபட்டது.

Update: 2022-08-09 16:35 GMT

சேந்தமங்கலம்:

கொல்லிமலை செம்மேட்டில் உள்ள வல்வில் ஓரி அரங்கில் தமிழ்நாடு செட்யூல்டு டரைப் (மலையாளி) பேரவை சார்பில் உலக பழங்குடியினர் தின விழா மற்றும் கலாசார விழா நேற்று நடந்தது. சங்கத்தின் மாநில தலைவர் வரதராஜூ தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் சரவணன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் கோவிந்தன், ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சித்ரா, சேந்தமங்கலம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சந்திரசேகரன், கொல்லிமலை சேர்மன் மாதேஸ்வரி அண்ணாதுரை, வாழவந்தி நாடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா ஈஸ்வரன், மாநில பொதுச் செயலாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனமான சேர்வை ஆட்டம் நடந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிவப்பிரகாசம், கலாவதி, சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம், பைல்நாடு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வராஜ், கீழ் செங்காடு சங்க செயலாளர் செந்தில் உள்பட மலைவாழ் மக்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வாழவந்தி நாடு பகுதியில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரசேகரன் தலைமையில் மலைவாழ் மக்கள் ஊர்வலம் சென்றனர்.

மேலும் செய்திகள்