தர்மபுரியில்விருந்தாளி அம்மன் கோவில் திருவிழாபக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்

Update: 2023-09-04 19:30 GMT

தர்மபுரி:

தர்மபுரி டவுன் காமாட்சியம்மன் தெரு விருந்தாளி அம்மன், முத்துமாரியம்மன், மேட்டு மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சக்தி கரகம் அழைத்ததும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகளும் நடந்தது. தொடர்ந்து செல்லியம்மன் அழைத்தலும், கோட்டை முனியப்பன் மற்றும் எல்லை முனியப்பனுக்கு சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் திருவீதி உலா நேற்று நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் கோவில் வளாகத்தில் நடைபெற்ற தீமிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) அம்மனுக்கு கூழ் ஊற்றுதலும், நாளை (புதன்கிழமை) மாவிளக்கு எடுக்கும் ஊர்வலமும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அம்மனுக்கு ஆடு, கோழிகள் பலியிட்டு சிறப்பு வழிபாடும், வருகிற 8-ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்