தர்மபுரியில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் கூழ் ஊற்றி வழிபாடு

தர்மபுரி புரோக்கர் ஆபீஸ் அருகில் இருந்து ஏராளமான பக்தர்கள் கூழ் பானைகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

Update: 2023-08-29 19:30 GMT

தர்மபுரி உழவர் சந்தை எதிரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 25-ந் தேதி கணபதி ஹோமம் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கங்கணம் கட்டுதல், சக்தி கரகம் அழைத்தல், முனியப்பனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மனுக்கு கூழ் ஊற்றும் விழா நேற்று நடந்தது. இதையொட்டி தர்மபுரி புரோக்கர் ஆபீஸ் அருகில் இருந்து ஏராளமான பக்தர்கள் கூழ் பானைகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

இந்த ஊர்வலம் கோவிலை வந்தடைந்ததும் அங்கு அம்மனுக்கு பக்தர்கள் கூழ் ஊற்றி வழிபட்டனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) அம்மனுக்கு சிறப்பு பூஜையும், நாளை (வியாழக்கிழமை) விருந்தாடி அம்மனுக்கு பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்தலும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா மற்றும் கும்ப பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்