நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே மாதேமங்கலம் கிராமத்தில் உள்ள புள்ளகுட்டி முனியப்பன்- முனியம்மாள் கோவில் திருவிழா நடந்தது. விழாவையொட்டி கங்கணம் கட்டுதல், சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று பொங்கல் கூடை அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து, ஆடு, கோழி பலியிட்டு வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.