நாகனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்காமராஜர் பிறந்த நாள் விழா

Update: 2023-07-16 19:30 GMT

 பென்னாகரம்:

பென்னாகரம் தாலுகா நாகனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. வட்டார கல்வி அலுவலர் மணிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவி சோபனா முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகேசன் வரவேற்றார். தொடர்ந்து காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு, கவிதை, ஓவியம், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஜெயஸ்ரீ, புனிதா, ஆசிரியர்கள் ரஞ்சித்குமார், மகாலட்சுமி, சுகந்தா, தெய்வாணி, அம்சா சத்துணவு அமைப்பாளர் உமா மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்