ராயக்கோட்டை அருகேபுனித அந்தோணியார் ஆலய திருவிழா

Update: 2023-07-09 19:30 GMT

ராயக்கோட்டை, ஜூலை.10-

ராயக்கோட்டை அருகே நாகமங்கலத்தில் லூர்து நகரில் உள்ள புனித அந்தோணியார் ஆலய 8-ம் ஆண்டு விழா நடந்தது. விழாவில் புனித அந்தோணியார் சிலை, புனித சூசையப்பர் சிலை, அன்னை ஆரோக்கிய மேரி சிலை மற்றும் இயேசுவின் சிலைகளுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடந்தது.

இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக குழந்தை இயேசுவை கையில் ஏந்திய புனித அந்தோனியார் உருவம் பதிக்கப்பட்ட கொடி ஆலயம் முன்பு ஏற்றப்பட்டது. தொடர்ந்து உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதனை தொடர்ந்து புனித அந்தோணியாரின் தேர் பவனி நடைபெற்றது. இதில் நடன கலைஞர் டானி உள்பட திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழுவினர் ரேய்ச்சல்மேரி விஜயகுமார், யுவராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்