தூத்துக்குடியில் இருந்து தர்மபுரிக்கு சரக்கு ரெயிலில் 1,319 டன் உரம் வந்தது

Update: 2022-10-23 18:45 GMT

தர்மபுரி:

தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 1,319 டன் உரம் தர்மபுரி வந்தது. இந்த மூட்டைகள் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி நடந்தது.

1,319 டன் உரம்

தூத்துக்குடி, மங்களூரு, மும்பை மற்றும் குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தர்மபுரிக்கு ஒவ்வொரு மாதமும் சரக்கு ரெயில்கள் மூலம் உரம் கொண்டு வரப்படுகிறது. அவை தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு லாரிகளில் பிரித்து அனுப்புவது வழக்கமாகும்.

அதன்படி தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 1,319 டன் பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உரங்கள் தர்மபுரி ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த உர மூட்டைகள் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் உர கடைகளுக்கு லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைக்கும் பணிநடந்தது.

ஆய்வு

தர்மபுரி மாவட்ட தனியார் உர கடைகளுக்கு 120 டன் பொட்டாஷ், 270 டன் காம்ப்ளக்ஸ் உரங்களும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு 220 டன் பொட்டாஷ், 25 டன் காம்ப்ளக்ஸ் உரங்களும் லாரிகள் மூலம் பிரித்து அனுப்பபட்டன. தர்மபுரி மாவட்ட இருப்பு குடோனில் 237 டன் பொட்டாஷ், 113 டன் காம்ப்ளக்ஸ் உரம் இருப்பு வைக்கப்பட்டது.

இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்ட தனியார் உர கடைகளுக்கு 99 டன் பொட்டாஷ், 163 டன் காம்ப்ளக்ஸ் உரங்களும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு 72 டன் பொட்டாஷ் உரமும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பணிகளை தர்மபுரி மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) தாம்சன் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது விற்பனை அலுவலர் ஜெகதீஷ், தர்மபுரி மாவட்ட மொத்த விற்பனையாளர் பார்த்திபன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்