கிடப்பில் போடப்பட்டுள்ள கம்பிவேலி அமைக்கும் பணி
கிடப்பில் போடப்பட்டுள்ள கம்பிவேலி அமைக்கும் பணி
திருப்பூர்
திருப்பூரில் கடந்த மாதம் ெநாய்யல் ஆறு தூா்வாரப்பட்டு ஆற்றின் கரையோரம் மக்கள் பாதுகாப்பு கருதியும், மக்கள் குப்பை கொட்டுவதை தவிர்க்கவும் வளர்மதி பாலத்திலிருந்து வலம் சாலை முடிவு வரை கம்பிவேலி அமைக்கும் பணி மாநகராட்சி சார்பில் நடைபெற்றது. முதல்கட்டமாக வளர்மதி பாலத்திலிருந்து செல்லாண்டியம்மன் கோவில் வரை அமைப்பதற்காக விறுவிறுப்பாக தொடங்கி 3 நாட்களில் 80 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றது. அதன்பின் நோய்யல் பொங்கல் திருவிழாவால் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் பணி கம்பிவேலி அமைக்கும் பணி நடைபெறாமல் ஒரு மாத காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி சிலர் மீண்டும் ஆற்றினுள் குப்பை கொட்டி வருகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பணியை மீண்டும் தொடர வேண்டும்.