உடல்கருகி பெண் பலி

அரக்கோணம் அருகே உடல்கருகி பெண் பலியானார்.

Update: 2022-07-06 18:55 GMT

அரக்கோணத்தை அடுத்த அம்மனூர் அவ்வை நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார். இவரது மனைவி செந்தமிழ் (வயது 32). கடந்த 26-ந்தேதி அன்று காலை செந்தமிழ் அடுப்பில் மண்ணெய் ஊற்றி தீ பற்ற வைத்த போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பற்றி கொண்டது. இதில் உடல் கருகிய நிலையில் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்