விபத்தில் பெண் பலி

தேன்கனிக்கோட்டையில் விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-10-28 19:57 GMT

தேன்கனிக்கோட்டை

தளியை அடுத்த ஜோகிப்பள்ளியை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 63). விவசாயி. இவர் தன்னுடைய அக்கா கமலாம்பாள் (65) என்பவருடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். மாலை 6.30 மணி அளவில் கும்ளாபுரம்- தளி சாலை சாமநத்தம் பஸ் நிறுத்தம் அருகில் சென்ற போது பின்னால் வேகமாக வந்த வாகனம் ஸ்கூட்டர் மீது மோதியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கமலாம்பாள் உயிரிழந்தார். நாராயணசாமி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தளி போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்