பெண் சித்ரவதை; 3 பேர் மீது வழக்கு

காரியாபட்டி அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்த 3 பேர் மீது வழக்குபதிவு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-10-07 18:35 GMT

அருப்புக்கோட்டை,

காரியாபட்டி சக்கரக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாலன். இவருடைய மகள் பாலமணி (வயது 29). இவருக்கும் கீழ உப்பிலிகுண்டு கிராமத்தை சேர்ந்த பிரபு என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என்பதால் பிரபுவின் குடும்பத்தார் வரதட்சணை கேட்டு பாலமணியை சித்ரவதைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாலமணி அளித்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் அவரது கணவர் பிரபு, அவருடைய தந்தை வெள்ளைச்சாமி மற்றும் தாய் குருவம்மாள் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்