குடும்ப தகராறில் பெண் தற்கொலை

குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-28 22:46 GMT

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த காய்கறி வியாபாரி ரவிக்குமார். இவருடைய மனைவி மணிமேகலை (வயது 31). கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மணிமேகலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்