பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஏர்வாடி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஏர்வாடி:
ஏர்வாடி அருகே சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தரம் மனைவி மாரியம்மாள் (வயது 55). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுந்தரம் இறந்து விட்டார். இதனால் தனியாக வசித்து வந்த மாரியம்மாள் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். அவர் நேற்று முன்தினம் வீட்டில் திடீரென்று ேசலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில், ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.